வாழ்வும் வாழ்வு நிமித்தமும்

வாழ்வும் வாழ்வு நிமித்தமும்

Friday, August 13, 2010

வம்சம் - பார்க்க வேண்டிய படம்


முதல் படம் வெற்றி என்பது கூட பெரிய விஷயமில்லை... இரண்டாவது படம்தான் ஒரு இயக்குநரின் திறமையை சோதிக்கும் என்று சொல்வார்கள். ஆனால் எதிர்பார்த்ததைப் போலவே பாண்டிராஜ் தனது இரண்டாவது படத்திலும் அசத்தி இருக்கிறார். தமிழில் யாரும் தொடாத கதை ( ஒரு பிரேசில் படமும், ஸ்பானிஷ் படமும் இதேப்போன்ற கதைக்கருவுடன் பார்த்ததாக ஞாபகம்) சுவாரசியான திரைக்கதை, யதார்த்தமான பாத்திரங்கள் (ஹீரோவைத்தவிர), உறுத்தாத எடிட்டிங், காட்சிகளின் உணர்வை நமக்குள் உண்டாக்கும் பின்னணி இசை, நம்மை குலுங்கவும், குதிக்கவும் செய்யும் வசனங்கள், காட்சிப்படுத்திய மிகையற்ற ஒளிப்பதிவு என படம் அற்புதமான அனுபவத்தைத் தந்தது.

சுனைனா, கஞ்சா கருப்பு, சீனுத்தேவர் என பலரது நடிப்பும்  தமிழக கிராமத்தில் வாழ்ந்த, வாழ்கிற மனிதர்களை அப்படியே காட்டுகின்றன. படத்தை முழுமையாக ரசிக்க மீண்டும் சிலமுறைப் பார்க்க உறுதியேற்றுள்ளேன்.

No comments: