வாழ்வும் வாழ்வு நிமித்தமும்

வாழ்வும் வாழ்வு நிமித்தமும்

Saturday, July 24, 2010

மதராசப்பட்டிணம் - எனக்கு ஏன் உற்சாகமூட்டவில்லை?

சென்னையின் வரலாறு மீது என்றுமே எனக்கு ஒரு காதல் உண்டு. பழைய கட்டிடங்கள், ஆறுகள், இடங்களின் பெயர்கள் பல சுவாரசியங்கள் நிரம்பியது சென்னையின் வரலாறு. இந்திய சுதந்திரத்திற்கு முன்பு இருந்த சென்னையை மையமாகக் கொண்டு திரைப்படம் என்றவுடன், படத்திற்கான அறிவிப்பு வந்த நாளில் இருந்தே ஆர்வம் எனக்குள் பிடிபடவில்லை. படத்திற்கான விளம்பரங்கள் வந்தபோது எனது ஆர்வம் மேலும் அதிகா¢த்தது. ஆனால் படம் பார்த்த போது மொத்தமும் பட்டுப்போனது.

தனது அந்திமக் காலத்தில் சென்னைக்கு வரும் லண்டன் சீமாட்டியிலிருந்து படம் தொடங்குகிறது. சுதந்திரத்திற்கு முன்பு இங்கு கவர்னராக இருந்தவா¢ன் மகள் தனது காதலனைத் தேடி வருகிறார். கையில் 1947-ம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம். நிகழ்காலமும், இறந்த காலமும் வந்து வந்து செல்லும்படியான திரைக்கதை, பழைய சென்னை, ஆங்கிலப் பெண்ணுடனான காதல் என சுவாரசியப்படுத்துவதற்கான காரணிகள் பல இருந்தும் படம் மிகவும் தட்டையாகப் போகிறது.

ஒரு ஆங்கில சீமாட்டிக்கும், சென்னை வண்ணாரப்பேட்டையில் வசிக்கும் ஏழை வண்ணானுக்கும் இடையே ஏற்படும் காதலுக்கான காரணங்கள் வழக்கமான சினிமாத்தனமான பாணியில் இருக்கின்றன. நாயகன் ஓடிச்சென்று கா¡¢ல் அடிபடவிருந்த கழுதையைக் காப்பாற்றுகிறான், கர்லான் கட்டையைக் கொண்டு உடற்பயிற்சி செய்கிறார்.... அவ்வளவுதான் உடனே சீமாட்டியின் மனதில் காதல் அரும்பி விடுகிறது. குறைந்தபட்சம் நாயகி லண்டன் பிராணிகள் வதை எதிர்ப்பு அமைப்பில் இருப்பவர் என்று ஒரு காட்சி வைத்திருந்தாலாவது, காதலுக்கு காரணம் இருந்திருக்கும். அதன்பிறகு காதல் வளர்வதற்கான காட்சிகளிலும் அழுத்தம் இல்லை. ஏழை வண்ணானுக்கு இங்கிலீஷ்கா¡¢ மீது வரும் மோகம் பற்றி எனக்கு கேள்விகள் இல்லை. எவ்வளவு அறிவு ¡£தியாக படித்தாலும் வெள்ளைத்தோல் பெண்களின் மீதான மோகம் நம்மை விட்டுப் போகாததிற்குக் நமது ஜீன்களைத்தான் குற்றம் சொல்ல வேண்டும். வழக்கமான ஆங்கிலேய வில்லன் அதிகா¡¢... புரட்சிக்குழு... என அரதப்பழசான ஒரே மாதி¡¢யான கதை எனக்கு சலிப்பூட்டியது.

பழைய சென்னையின் சில பகுதிகளான சென்ட்ரல் ரெயில் நிலையம், கூவம், மவுண்ட் ரோடு ( அண்ணா சாலை) போன்ற பகுதிகளை மீள் உருவாக்கம் செய்தது போன்ற கலை இயக்கம் படத்தின் மிகப்பொ¢ய பலம். எனது கணிப்பையும் மீறி படம் வெற்றிபெற்றதற்கு இதுவும் ஒரு காரணம்.

வழக்க்மபோல ஹெனிபா தனக்கான பாத்திரத்தை மிகவும் சிறப்பாக செய்திருந்தார். சதாசர்வ நேரமும் மனைவியோடு சல்லாபித்திருக்கும் வாத்தியார், நாயகனும் நாயகியும் கூவத்தில் காதல் செய்வதைக் கண்டு குழப்பத்துடன் தினமும் கடந்து செல்லும் பொ¢யவர், தற்போதைய சென்னையில் இங்கிலீஸ் பாட்டியை ஏமாற்றும் கைடு போன்ற சில பாத்திரங்கள் போற போக்கில் சுவாரசியமூட்டுகின்றன. ஆர்யா & கோ ஆங்கிலம் கற்கும் காட்சி, புகைப்படத்திற்கு அசையாமல் போஸ் கொடுக்கும் ஹெனிபா போன்ற சில இடங்களில் சி¡¢ப்புகள் உண்டு. கிளைக்காடசிகள் முதல் படத்திற்கான 'அட' போட வைக்கும் விளம்பரங்கள் வரை கவனம் செலுத்திய இயக்குநர் மையக் கதையிலும் காட்சி அமைப்பிலும் கோட்டை விட்டு விட்டார் என்பது எனது கருத்து. இதனால்தான் நாயகனும் நாயகியும் பி¡¢யும்போது நமக்கு எந்த ஒரு வருத்தமும் ஏற்படவில்லை.

இந்தப் படத்தின் மீதி விமர்சனம் விரைவில் பதிவேற்றப்படும்.

No comments: