எதெற்கெடு அம்மா வேணும்
அப்பாவிற்கு
சகலவிதமான பசி தீர்க்க
கை கால் பிடித்து விட
வைகறையில் எழுப்ப
உதைத்து வசைபாடி
கோபம் தணிக்க
என எதெற்கெடுத்தாலும்...
எதற்கும் தேவையில்லை அப்பா
அம்மாவிற்கு
விடியலில் வாசல் தெளித்து
கோலம் போட
சுள்ளி பொறுக்கி சோறு சமைக்க
எனக்கு நிலாச்சோறூட்ட
இரவுமட்டுமறிய அழ
இப்படி எதற்கும்...
எனினும் அம்மா சொல்கிறாள்...
"எனக்கெல்லாமே அவருதாங்க"
பின் குறிப்பு;
24.12.2001 -ம் தேதியிட்ட குமுதம் இதழின் 83-ம் பக்கத்தில் வெளியான கவிதை இது .
6 comments:
so touching one! keep up the good work da!
very touching one.. keep up the good work da!
piramatham..
Arumaiyaana kavithai, unmaiyum uyirpum vaarthaigalil, paaraatukkal
அருமை தோழர் ....
தாய்மையின் பரிபூரணம்..
Post a Comment