வாழ்வும் வாழ்வு நிமித்தமும்

வாழ்வும் வாழ்வு நிமித்தமும்

Monday, June 28, 2010

பிடித்த கவிதைகள்

வற்றிப்போவதாய் இருந்தாலும்

இந்த மீனுக்கு

ஓடை போதும்

உனது கண்ணாடித்தொட்டியில் போய்

நீயிரு!

(எழுதியவர் - கவிஞர் பச்சியப்பன்.)



எனக்குள் ஒரு காடு இருந்தது

சில மிருகங்களும் இருந்தன

வேட்டையாடத் தெரியவில்லை

கடைசியில் காட்டையே அழிக்க

வேண்டியதாயிற்று.



எல்லாம் எட்டிவிடும் தூரத்தில்தான்

நடுவில் சில

எச்சில் பருக்கைகள்.

(எழுதியவர் - கல்யாண்ஜி)



என்னைக் குறிக்கும்

நான் என்பதை

மிகச்சிறியதாய் உணர்கிறேன்

பொறுத்திரு எனக்குள் ஒருவன்

வெடித்துக் கிளம்பக் காத்திருக்கிறான்!

(எழுதியது யாரென ஞாபகமில்லை)

No comments: