வாழ்வும் வாழ்வு நிமித்தமும்

வாழ்வும் வாழ்வு நிமித்தமும்

Wednesday, September 15, 2010

நேப்பியர் பாலத்தில் கழுதையொன்று தனியே நடந்து கொண்டிருக்கிறது!

இப்படியொரு குறுந்தகவல் வந்தது உன்னிடமிருந்து
அகிரா குரசேவாவின் dreams  படத்தில் வான்காவின் ஓவியம் உயிர்பெறும் காட்சியைப் போன்று எனது மனக்கண்ணில் விரிந்தது அந்தக்காட்சி....
துணையெழுத்தில் எஸ். ராமகிருஷ்ணன் சென்னையில் கழுதையைத் தேடி மகனுடன் பயணித்ததைப் படித்ததில் இருந்து,  உனக்கு கழுதைகளின் மேல் ஆர்வம்  அதிகரித்துவிட்டது...

இதேவாரத்தில் இந்த குறுந்தகவலை இரண்டாவது முறையாக அனுப்பி விட்டாய்...
உத்தமர் காந்தி சாலையில் கழுதை தனித்து நடப்பது உனக்கு பரிதாப உணர்வை தோற்றுவிக்கிறது. ஆனால் ஒரு கழுதை மட்டும் எப்படி இன்னும் உயிருடன் இருக்கிறது என்ற எரிச்சல் நகரத்துவாசிகளுக்கு ஏற்படும் வாய்ப்பும் இருக்கிறது.... எஸ்.ராமகிருஷ்ணுணக்கு தகவல் சொன்னால் அடுத்தமுறை தொடர் எழுதும்போது உன்னையும், கழுதையையும் பதிவு செய்யும் வாய்ப்பாவது கிடைக்கும்....

நகரத்து முதலைகளுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் எனது மனம்   இரண்டாவது முறை வந்த குறுந்தகவலுக்கு  எரிச்சல் கொண்டு  உன்னை கடிந்து பதிலனுப்பியது...
அந்த நொடியில் மழையில் நனைந்த குருடனின் ஓவியத்தைப் போல் கரைந்து அழிந்தது அந்தக்காட்சிக்கான மனப் பிம்பமும்,  நமது உறவின் மென்மையான பகிர்தலும்....

No comments: